top of page
mountain.png

தோற்றம்

30.03.2005. கலியுகத்தில் அகத்தியர் வழிபாட்டின் ரகசியம்

ஆதிபரம குரு முருகப் பெருமான் அகத்தியருக்கு உபதேசித்த ஆத்மஞானத்தை அவ்வழி வந்த குரு சீடர் பரம்பரைக்கும் உலக மக்களுக்கும் இலவச சேவையாக போதித்தல்.

முகவுரை

சத்தியமே அகத்தியம், அகத்தியமே ஜெயம், மனிதன் என்பவன் தெய்வமாகலாம் எனும் மறை பொருளை உலருக்கு உணர்த்துவதே சித்தர் நெறியாகும்.

 

இந்நெறியில் வாழும் மக்களால் உலகில் நிலவும் தீமைகள் அனைத்தும் மாய்ந்து தர்மம் வெல்லும்.

 

செயல்பாடுகள் அனைத்தும் ஆதி பரமகுரு முருகப் பெருமானின் தலைமை சீடன் அகத்திய மாமகரிஷியின் வழியையும் நெறியையும் பின்பற்றியே இருக்கும்.

 

அறநெறியில் வாழ நினைக்கும் அன்பர்களுக்கும் பரமாத்மா சக்திபீடம் என்றும் நல்வழிக்காட்டி பிறப்பின் பயனை அடையும் இலக்கை அடைய துணை புரியும்.

 

பரமாத்மா சக்தி பீடத்தில் முருகப்பெருமான், அகத்தியர் பெருமானுக்கு போதித்த ஆத்ம ஞானத்தை குரு சீடர் பரம்பரையில் நிலை நிறுத்தி சற்குரு ஸ்ரீ வாலை ரிஷி தன்னை அர்ப்பணித்து கொண்டு உயிருக்கும் மேலான நல் ஒழுக்க நெறிகளையும் வழிபாட்டு முறைகளையும் போதித்து வருகிறார்.

நல்லொழுக்கமே கர்ம வினைகளை தீர்க்க சிறந்த பரிகாரம்

மனதை புனித படுத்தும் (6) முருகனின் தெய்வ குணமான அன்பு, பாசம், பணிவு, பரிவு, சாந்தம், ஞானம் அனைத்தும் அறிந்து பின்பற்றி வாழ்தல். (நல்வினைகள் கூடும்). மனதை மாசு படுத்தும் (ஏ) இடும்பனின் அசுர குணமான காமம், கோபம், துரோகம், வஞ்சனை,சலிப்பு, வெறி அனைத்தும் அறிந்து விடுவித்து வாழ்தல். (தீய வினைகள் குறையும்). நல்லதே நினைப்போம். நல்லதே பேசுவோம், நல்லதே செய்வோம் நம் வாழ்வில் நல்லதே நடக்கும்.

பிறப்பின் பயன்

மனிதனாக பிறப்பெடுத்த ஜீவாத்மா உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தி புனிதனாக மாறி இறுதியில் தன் உயிர் ஆத்ம ஜோதியை அறிய வைத்து மோட்சம் அடைய வழிகாட்டுதல்.

நோக்கம்

ஆன்மீக வாழ்வியல் நெறியை எளிமையாக மக்களுக்கு உணர்த்தி துன்பத்திலிருந்து விடுவிக்க வழிகாட்டுதல்.
 
இல்லறத்தில் இருந்துகொண்டே நல்லறத்தையும் கடை பிடித்து இன்பமுடன் வாழ வழிக்காட்டுதல்.
 
குரு சீடர் பரம்பரை மூலம் அகத்தியர் வழிபாட்டின் ரகசியத்தை உலக மக்களுக்கு வழிகாட்டுவதற்கு பல ஞான குருமார் களையும் உருவாக்கி அவர்களுக்கு ஞான பயிற்சியை வழங்குதல்.

சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் நன்னெறி பயிற்சி வழங்குதல்

செயல்பாடுகள்

நன்னெறி பயிற்சி, யோகாசன பயிற்சி, மூச்சு பயிற்சி, மன ஒருமை பயிற்சி, ஜெபம், வாசியோகம், 'சத்விசாரம்' (ஆன்மீக போதனை & ஆத்ம ஞானம் பற்றிய கலந்துரையாடல்), ஆன்மீக பயிற்சி பட்டறை, ஆன்மீக கருத்தரங்கு & மாநாடு, தியானம் & மெளனப் பயிற்சி,

நல்நெறியே வாழ்க்கை நெறி, அதுவே மோட்சத்திற்கு வழி!

எண்ணம், சொல், செயல் புனிதமானால் மனிதனும் தெய்வமாகலாம்

குருகுலம்

பிறந்திடவே யாகாது பிறந்தாயானால்
பெருமையுடன் ஞான வித்தைக் கற்க வேண்டும்  
(அகஸ்தியர்)

குருகுலம்

அகஸ்தியர் வழிபாட்டின் ரகசியம் குரு சீடர் பரம்பரை

மனித பிறப்பின் பயன்

adults page intro.jpeg

குருகுலம்

மாணவர்களை வழி நடத்தும் முறை

book kidss.jpg

Connect With Us

Reach out to us to learn more about our programs, admissions, and upcoming events.

10B, Dolomite Park Avenue, Jalan Batu Caves, 68100 Batu Caves, Selangor

Office : +60 3-6178 6031 

Mobile (Whatsapp) : +6016-331 5589

We'll Get Back to You Soon

bottom of page