குருகுலம்
ஶ்ரீ முருகப் பெருமான் அகத்திய மாமுனிவருக்கு போதித்த ஆத்ம ஞானம் சித்தர் நெறி வாழ்வு
அகத்திய பெருமான் குருகுலம் அமைத்தற்கான முதன்மை காரணம்.
தனது தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்களுக்குப் பராபரத்தைப் பற்றியும் மறைப்பொருளைப் பற்றியும் நுண்ணறிவுள்ள சீடர்களுக்கே கற்றுக் கொடுத்தார்.
முருகப் பெருமான் ஆன்மீக அறிவும், ஆத்மாவின் முக்தியைப் பற்றியும் அகத்தியருக்குத் தீட்சையளித்துப் போதித்தார்.
முருகப் பெருமான் ஆன்மீக போதனையும் ஆன்மா விடுதலைப் பற்றிய போதனைகளையும் அகத்தியருக்கு அளித்தார்.
சித்தர்கள் மனித குலத்தை மாயையிலிருந்து விடுவித்து துன்பங்களிலிருந்து காப்பாற்றி அவர்கள் மோட்ச கதி அடைவதற்கான வழிமுறைகளைக் காட்டினர்.
பிறப்பு என்பது முடிவில்லா ஒரு பயணம் ஆகும்.
ஆன்மா இவ்வுடலை விட்டு வெளியானவுடன் ஆன்மா இறைவனை நெருங்க வாய்ப்பிலாததால் ஆன்மா இறைவனை அடைவதற்கான வழிமுறைகளை சித்தர்கள் மக்களுக்கு விளக்கி கூறினார்கள்.
குருவிடமிருந்து தீட்சையைப் பெற்று உடல், உயிர், மனம், அறிவு, ஆத்மாவையும் ஒன்றிணைத்து வெற்றி காண்பதை பற்றி மானிடர்களுக்கு எடுத்துரைத்தனர்.
இந்நிலை அடைவதற்குச் சித்தர்கள் நன்னெறிகள், மன ஒருமை பயிற்சி, மௌன பயிற்சி, ஆத்ம ஞானம், தியானம் மேற்கொண்டு மனித பிறவி எடுத்த பயனை அடைய வழிகாட்டினர்.
மனிதர்களின் வாழ்க்கை பயணத்தில் நல்ல ஒழுக்கமும் எண்ணம் சொல் செயல் புனிதமானால் மனிதனும் தெய்வமாகலாம் என்பது சத்தியவாக்காகும்.
அட்டாங்கயோகம் அது பலித்திட அருளும் முத்தி என்றார் (திருவள்ளுவர்)
கருமயோகங்கள் எட்டு வகைப்படும். இந்த யோகங்களால் சித்தி கை வரப்பெறும்
1. இயமம்
நல் எண்ணங்களை வளர்த்தல்.
2. நியமம்
நற் காரியங்களை செய்தல்
3. ஆசனம்
உடலை ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாக வைத்துக்கொள்ள உதவுவது யோகாசன பயிற்சியாகும்.
4. பிராணாயாமம்
உள் மூச்சு வெளி மூச்சு இரண்டையும் குரு கற்பித்த அளவில் ஒழுக்கப் படுத்தினால், அது மனதை கட்டுப்படுத்தி உடல் உறுப்புக்கள், நாடி நரம்புகளையும் பலப் படுத்தி தரும்.
5. பிரத்தியாகாரம்
ஐம் புலன் அடக்கம், அதாவது ஒளி, சப்தம், ஸ்பரிசம் இவைகளில் இருந்து தன் மனதை கட்டுப்படுத்தி உள்ளுணர்வுடன் இருக்கும் நிலை இது.
6. தாரணை
தன் மனதில் எழும் அனைத்து எண்ணங்களையும் வெளிப்படுத்தி அதில் சிக்காமல் ஒரே நிலையில் அமர்தல். இதற்கு உதவ குருமந்திரம் ஜெபிக்கலாம்.
7. தியானம்
என்பது மனதை புருவ மையத்தில் நிலையாக கட்டி நிறுத்த வேண்டும். சும்மா இருந்து சுகம் கான்பது.
8. சமாதி
தன்னை மறந்து, வெளி உலகத்தை மறந்து, தன் உள்ளத்தை சரி செய்து தன்னை பற்றிய அறிவே இல்லாமல் நெடுநேரம் தனக்குள் ஆனந்தத்தில் ஆழ்ந்திருப்பது சமாதி என ப்படும். சும்மா இருந்து பரசுகம் காண்பது.
மனிதன் தன் வாழ்க்கையில் தினந்தோறும் செய்து வரும் காரியங்களில் _ ஜெபமும், தியானமும் சேர்க்கப்படவேணும். உடல் வளர்ச்சிக்காக உண்கிறோம், வளரும் உடலை நலமாக வைத்துக் கொள்ள தியானம் செய்யப்படுகின்றது. புத்தியை கூர்மையாக்குவதற்கு அறிவு வேண்டும். புத்தியின் போக்கை கட்டி பிடிக்க தியான முறையினால் தான் முடியும். மனதில் எழுந்து வரும் உணர்ச்சிகளை ஒழுக்கப் படுத்துவதற்காகவும் தியானம் பயன் படுகிறது. இறைவனின் அருளைப்பெற ஞானமும் தியானமும் சேர்ந்திருந்தால் நம்மை நாம் யார் என்பதை அறிவோம். தியானத்தில் ஒரு மேல் நிலையை அடைந்தப்பின் தன் ஆத்மனை உணர முடிகின்றது. தியான மார்க்கத்துடன் ஞானமும் இனைந்து வந்தால் இல்லறத்தில் இருந்து கொண்டே நல் அறத்தையும் கடைப்பிடித்து வந்தால் அதுவே மோட்சத்திற்கு வழிக்காட்டியாகும்.
எனவேதான் மலேசிய ஶ்ரீ அகத்தியர் ஞான பீடமானது எந்த ஒரு கட்டணம் வசூலிக்காமல் சித்தர்களின் மெய்ஞான கோட்பாட்டினையும் நெறிமுறைகளையும் தகுதியானவர்களுக்கு மட்டும் இலவசமாகக் கற்றுத் தருகின்றது