top of page
Search

பரமாத்மா சக்தி பீடம்

Updated: Aug 13, 2024



இது நாள் வரையில் ஸ்ரீ அகஸ்தியர் ஞான சக்தி பீடம் என்று அழைக்கப்பட்டு,தற்போது ஆதி பரமகுருவான, முருகனின் ஆட்சியின் கீழ், பரமாத்மா சக்தி பீடம் என்று முழுமையான நாமம் பதிந்தாகிவிட்டது.


வாலை சித்தன் தன் செங்கோல் ஆட்சியில்,  அன்னை  பவதாரணியின் பிரம்மாண்ட சக்தியடனும்,  இப் பரமாத்மா  சக்தி  பீடம் உருவெடுக்கும்.இனி நிறைய வியக்கத்தக்க மாற்றங்களை இங்கு காணலாம், வையகம் முழுவதும்.  எங்கெல்லாம் இந்நாமம் கொண்ட பீடங்கள் உருவாகுதோ,

  அங்கெல்லாம் பல அதிசய நிகழ்வுகள் நடக்கவிருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது. வரலாறு படைக்கப் போகிறது பரமாத்மா சக்தி பீடம்! ஞானமும் மெய்ஞானமும்  பொங்கலாக பொங்க போகிறது  ஏனென்றால் இது அன்னை ஆதிசக்தியின் ஞானக் களஞ்சியம்!


இஞ்ஞான தகவல்களை உணர்த்தவும். உணரவும் நிறைய தகுதி பெற்ற சீடர்கள், சிறந்த குருமார்கள், மகான்கள், சித்தர்கள் உருவாகப் போகிறார்கள்.  பரமாத்மா சக்தி பீடத்தில் இறுதி வரையில் நிலையாக உலா வரப்போகும் மக்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.

         

அவர்களுக்கு என்றும் எங்கள் அருளாசியை வழங்கி துணை நிற்போம்! இது எங்களின் சத்தியவாக்கு ஆனால் நினைவில் இருக்கட்டும் எங்களின் ஆயுதம் ஒழுக்கமென்று. இங்கு பயிலும் குருகுல மாணவர்களும் சிறந்தே உருவாகுவார்கள். ஐயமில்லை இதில்!  அவர்களுக்கு போதிக்கும் ஆசிரியர்களும் அன்பும், பண்பும் நிறைந்தவர்கள்.

         

மாணவர்களின் எதிர்காலமும் அவ்வாறே சிறகடிக்கும். இவர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 


 
 
 

Comments


© 2023 by Paramathmah Shakthi Beedam. All rights reserved.

  • facebook
  • twitter
  • youtube
bottom of page