மனித பிறப்பின் பயன்
மனிதன் மனிதனாக வாழ தடையாக இருக்கக்கூடிய எதிர்மறையான மனித குணங்களைச் சரி செய்து மனிதர்களை நல்வழிப்படுத்துவது. எண்ணம், சொல், செயல் ,இவைகளைத் தூய்மையாக்கி மனிதன் மனிதனாக வாழ்ந்து மோட்சம் அடைய வழிகாட்டுவது குருகுலக் கல்வியாகும். ஞானத்தின் படிகள் 4 சரியை, கிரியை, யோகம், ஞானம், எனப் பிறப்பு முதல் இறப்பு வரை செல்லும் வாழ்க்கை பாதையில் மனிதனை மனிதன் உணர்ந்து வாழ்தல்.
மனிதனைத் தெய்வீகத்தன்மை அடையும் வழிகளைக் கற்றுத்தரும் ஒரு இயக்கமாக பரமாத்மா சக்தி பீட இயக்கம் வலம் வந்து கொண்டிருக்கின்றது. இந்த இயக்கத்தின் நோக்கமே ,மனிதனுக்கு இப்பிறப்பின் நோக்கத்தை உணரவைத்து ,உலகத்தை இயக்கும் பரம்பொருளை அறியசெய்வது. மனிதன் இறைசக்தியைச் சென்றடையும் யுக்திகளைக் கற்றுத்தந்து ஞான நிலையையும்,இந்த நான்கு பரிணாம வளர்ச்சியின் வழி அடைய வைப்பதேயாகும்.
01
சரியை
குருமந்திரம், நன்னெறிபயிற்சி
02
கிரியை
8 நடைபயிற்சி, மூச்சுபயிற்சி,மன ஒருமை பயிற்சி
04
ஞானம்
அர்த்தமெளனம்,தவம்,ஜீவாத்மன் பரமாத்மனை அடைதல்
03
யோகம்
ஆத்மாவை அறிதல், உணர்தல்,காணுதல்,
வாசியோகம், தியானம்
குருவருள் நெறி வழிபாட்டின் மூலம்தான் யோக நிலையில் தன்னை அறியும் நிலை ஏற்படுகின்றது.இந்நிலையில் பரம்பொருளின் தெய்வீகத்தை உணர்தல். எல்லாவற்றையும் ஏகமனதோடு,ஒரு முதிர்ச்சியோடு பார்க்ககூடிய நிலையில் இருப்பார். உலக வாழ்க்கையில் பற்றின்மையாக்கி தன் ஆத்மாவை உணர்ந்து இறை சக்தியோடு ஒன்றிணைய முற்படுவார். இறை சக்தியோடு கலந்து முழுமையாக மனதை ஒரு நிலைப்படுத்தி தன்னை தவ நிலைக்கு கொண்டு செல்லும் முதிர்ச்சி தன்னிடம் இருக்கும். இறுதியாக தன் ஆத்மா பரமாத்வாவுடன் இணைந்து தெய்வ நிலையை அடைவார்.இதுவே மனித பிறப்பின் நோக்கமாகும். ஞான நிலையை அடைவதற்கு பரமாத்மா சக்தி பீடத்தின் ஸ்தாபகர் ஶ்ரீ வாலை மாமகரிஷி அவர்களின் தலைமையில் தன் சீடர்களுடன் அனைத்து நடவடிக்கைக்களையும் நடத்தி கொண்டிருக்கிறார். இந்த இயக்கம் பத்துகேவஸ் பரமாத்மா சக்தி மலையில் சித்தர் ரிஷி குருகுலம் ஆசிரமம் அமைத்து குரு சீடர் பரம்பரை உருவாக்கி செயல்பட்டு வருகிறது.
இந்தக் குருகுலத்தில் இலவசமாக குருவழிபாடு , நன்னெறி பயிற்சி, 8 நடை பயிற்சி, மூச்சு பயிற்சி, மன ஒருமைபயிற்சி போதித்தல். மேலும் வாசி யோகப் பயிற்சி, தியானப் பயிற்சி , மௌன பயிற்சி தகுதியானவர்களுக்கு போதிக்கப் படுகிறது.
மனிதனை முதல் படியிலிருந்து பரிணாம வளர்ச்சியின் அடுத்தபடிக்குக் கொண்டு செல்லும் அடுத்த ஞான நிலை அடைவதற்கான செயல்முறை திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் மனிதர்கள் தற்போதுள்ள எதிர்மறையான குணங்களிலிருந்து விடுபடுவார்கள் சத்தியம், அன்பு, தர்மம், ஞானம் என நல்ல குணங்களை நெறிபடுத்தப்படுவார்கள். இதன்வழி மனிதர்கள் மாபெரும் மறுமலர்ச்சி காணமுடியும். மனிதன் மனிதனாக வாழ்ந்து ,மனிதனைப் புனிதனாக்கி மோட்சம் அடையவைப்பதே குரு குலக்கல்வியின் இலட்சியமாகும்.
Get in Touch with Paramathmah Shakthi Beedam
Feel free to reach out to us with any inquiries or to schedule a visit to our ancient residential school of Siddha Masters/Siddha Academy located in Malaysia since 2005.
10B, Dolomite Park Avenue, Jalan Batu Caves, 68100 Batu Caves, Selangor
Office : +60 3-6178 6031
Mobile (Whatsapp) : +6016-331 5589